தகாத உறவு காரணமாக பெண் கத்தியால் குத்திக் கொலை : குற்றாவளியை கைது செய்து போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் தகாத உறவு காரணமாக பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் தகாத உறவு காரணமாக பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் பல்கீஸ் பேகம். இவரது கணவர் இப்ராகிம் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி காலை பல்கிஸ் பேகம், அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த அபுதாகீர் என்பவரை கைது செய்தனர். இவர், திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த போது, அவருக்கும் பல்கீஸ் பேகத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் பழகி வந்த நிலையில், பல்கீஸ் பேகம் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதை அறிந்த அபுதாகீர் அவரை எச்சரித்துள்ளார். இதனை ஏற்க மறுத்து அபுதாகீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அபுதாகீர் பல்கீஸ் பேகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். 



இதனையடுத்து, தனிப்படை அமைத்த திருப்பூர் தெற்கு போலீசார் திண்டுக்கல் சென்று அபுதாகீரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...