பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த நபர் தற்கொலை : உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராத்தால், மனமுடைந்த ஓட்டல் உரிமையாளரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராத்தால், மனமுடைந்த ஓட்டல் உரிமையாளரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வாலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா தேவி. இவர்களுக்கு மதுவர்ஷா, ஹரினி என 7 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே, தேவபிரகாஷின் சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் இருவரும், தேவபிரகாஷிடம் தொழில் செய்வதற்க்காக ரூ. 9 லட்சம் வாங்கிய நிலையில், பல மாதங்களாக பணத்தை திருப்பி தராமால் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 9 லட்சம் பணத்திற்கான வட்டியை தேவபிரகாஷ் கட்டி வந்த நிலையில், தனது சித்தி மற்றும் சித்தப்பாவிடம் நேற்று முன் தினம் பணத்தை எப்போது தருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, முறையாக பதில் அளிக்காமல் அலட்சியத்தோடு பதில் அளித்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேவபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இதனிடையே, தேவபிரகாஷ் தனது இறப்பிற்கு காரணம் (சித்தி செல்வி மற்றும் சித்தப்பா சுரேஷ் ) என கைப்பட கடிதமும் எழுதி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேவபிரகாஷின் உறவினர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, தேவபிரகாஷின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே தேவபிரகாஷின் உடலை வாங்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...