மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிகள் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் : குற்றவாளி வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்

கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகளை ஆணவ கொலை செய்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகளை ஆணவ கொலை செய்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும், அதே பகுதியில் உள்ள தர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில், கனகராஜன் காதலுக்கு அவரது சகோதரர் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி காதல் ஜோடிகள் இருவரையும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் அரிவாளால் வினோத் சரமாரியாக தாக்கினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். 



இதையடுத்து, வர்ஷினி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், வினோத்திற்கு 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...