கோவை : தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தமிழக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.
கோவை : தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தமிழக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால், தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது, எனக் கூறப்பட்டுள்ளது.