மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் ராஜினாமா

திருப்பூர் : திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படாததைக் கண்டித்து மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படாததைக் கண்டித்து மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு கட்சியை சேர்ந்த 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவுப்படி ஜீன் மாதம் 7ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இதில், 1,850 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 185 பேர் மட்டுமே வாக்களித்து 11 பேரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், தேர்தல் முறையாக நடத்தப்படாமல் 7 அ.தி.மு.க. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டித்தும், தாங்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை எனக் கூறியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் எம். காந்திமதி (சி.பி.எம்.), பி. ஈஸ்வரி (தி.மு.க.), பி.நாச்சிமுத்து (தி.மு.க.), ஜி.சரவணமுத்து (த.மா.க.) நான்கு பேரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கூட்டுறவு சங்க தலைவருக்கு அனுப்பியுள்ளனர். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இயக்குநர்கள் தாங்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...