சீனா செல்லும் இந்தியப் பிரதிநிக்குழுவில் இடம்பெற்ற ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்

கோவை : இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், நாளை சீனா செல்லும் இந்தியக் குழுவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் இடம்பெற்றுள்ளார்.

கோவை : இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், நாளை சீனா செல்லும் இந்தியக் குழுவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் இடம்பெற்றுள்ளார். 

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இளைஞர் பரிமாற்றத் திட்டம் 2006-2007-ம் ஆண்டிலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஜூன் மாதம் 200 பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கின்றனர். இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் எஸ். ஹரிஹரன் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அவருக்கு கல்லூரியின் இணை நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசுவாமி, தலைமைச் செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் இந்த சீன சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் குழுவில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் தலைவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்கள் ஆகியோர் உள்ளனர். இந்த இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் மூலம், இந்தியா மற்றும் சீனா அரசுகள் தங்கள் இளைஞர்களுக்கு ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொள்ள வாய்ப்புகளை வழங்க உத்தேசித்துள்ளன. இக்குழு நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை சீனாவிலுள்ள பெய்ஜிங், வுஹான், குன்மிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.

சீனாவில் அவர்கள் இருக்கும் காலகட்டங்களில், அங்குள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு செல்லுதல், சுற்றுப்பயணங்கள் மற்றும் விரிவுரைகள் மூலமாக அந்நாட்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். மேலும், சீனாவிலுள்ள பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஏற்படும் தொடர்புகளின் வாயிலாக சீனாவின் தொழில், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நகர்ப்புற திட்டமிடல், வேளாண்மை மற்றும் ஆரோக்கியம் ஆகியவை பற்றிய தொடக்க அறிவினை பெறுவார்கள். சீன இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு ஏற்கனவே வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...