கோவை : தைராய்டு புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், உடல் முழுவதும் பரவி, வாழ்க்கை தரத்தை சீரழித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என புற்றுநோய் இயக்குநர் டாக்டர் பி. குகன் தெரிவித்துள்ளார்.

தைராய்டு புற்றுநோய் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் பி. குகன் கூறியதாவது:- கழுத்து பகுதியின் பின் பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒரு சுரப்பி தான் தைராய்டு. இதில் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிதானது. இந்தியாவில் 14000 நோயாளிகளில் ஒருவருக்கே இப்புற்றுநோய் கண்டறியப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் ஆரம்ப நிலையில் எவ்வித அறிகுறியும் இருப்பதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், கழுத்துக்கு முன் பகுதியில் சிறிய கட்டி தென்படலாம். குரலில் மாறுதல், பேசுவதில் சிரமம் ஏற்படுதல், விழுங்கும்போது கட்டி தென்படுதல், உணவு, தண்ணீர் விழுங்க சிரமம், மூச்சு திணறுதல், தொண்டையில், கழுத்தில் வலி ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

தைராய்டு புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. காம்பு வடிவம், நுண்ணறை, மையப்பது, திசுக்களின் தன்மை புற்றுநோய் போன்ற வகைகள் உள்ளன. காம்பு வடிவம், நுண்ணறை வகை புற்றுநோய் தான் தைராய்டு புற்றுநோயில் 90% காணப்படுகின்றன. இதன் மேலாண்மையும், சிகிச்சை முறையும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆரம்ப நிலையில் இந்த இரண்டு வகை புற்றுநோயும் கண்டறியப்பட்டால் எளிதாக குணப்படுத்த முடியும். மெடுலரி (Medullary ) மற்றும் கார்சினோமா (carcinoma) எனப்படும் புற்றுநோய் வகைகள் 3–4% மட்டுமே ஏற்படுகின்றன. திசுத்தன்மையில் ஏற்படும் தைராய்டு புற்றுநோய், மிகவும் குறைவாக 1–2% அளவு ஏற்படுகின்றன. இந்த வகையை கட்டுப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் மிகவும் கடினமானது. இது வேகமாக பரவக் கூடியது.
தைராய்டு புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை, அயோடின் கதிரியக்க சிகிச்சை, வெளியிலிருந்து கதிரியக்க சிகிச்சை மற்றும் இலக்கு நோக்கிய சிகிச்சை முறைகள் உள்ளன. பல நோயாளிகளுக்கு தைராய்டு சுரப்பியை அகற்றி மாற்றாக ஹார்மோன் செலுத்தும் சிகிச்சை தரப்படுகிறது. சில வகை தைராய்டு புற்றுநோய் அருகில் உள்ள உள் உறுப்புகளையும் பாதிக்கின்றன. இவை, அயோடின் கதிரியக்கம், இலக்கு நோக்கிய சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படுவதில்லை. இலக்கு நோக்கிய சிகிச்சையோடு, புதிய மருந்து செலுத்துவது இவர்களது வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது. நீண்ட நாட்கள் கதிரியக்க சிகிச்சைக்கு பலனளிக்கவில்லை என்றால், மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை ( DCGI ), லேன்விட்டானிப், என்ற அமில நொதியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போதைய சிகிச்சை முறையில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட சிகிச்சையாக உள்ளது. தைராய்டு புற்றுநோய் செல்கள் மீது செயலாற்றும் தன்மையை கொண்டதாக உள்ளது.
குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் வழியாகவும் வர வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்பும், அனைத்து வயதினருக்கும் முதியோருக்கும் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. தைராய்டு சுரப்பி, கதிரியக்கத்துக்கு உட்பட்டிருந்தாலும் இந்த புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயை முன்பே கண்டறிவது எளிதானது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தால், மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் 30% அளவில் மட்டுமே உள்ளன. மீண்டும் வராமல் தடுக்க தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மற்றும் வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு அவசியம். தைராய்டு புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.