கோவை : குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். இதில், மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சி. சிவசாமி, மாவட்ட பொருளாளர் யூ.கே. சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் ஆர். ஏ. கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மு.வ. கல்யாணசுந்தரம், ஆர். சுதர்சன், நிர்மலா மருதகுட்டி மற்றும் ரவீந்திரன், வி.ஆ. பாண்டியன், அறிவொளி, ஆறுச்சாமி, சு.பழனிசாமி, அமிர்தம், கலா, நந்தினி, ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடு, கோவை மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோக உரிமையை அந்நிய நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்காதே உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.