விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து துடியலூர் ஐ.டி.ஐ. ஆதிதிராவிட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : துடியலூர் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : துடியலூர் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



துடியலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு ஐ.டி.ஐ. நிறுவனமானது செயல்பட்டு வருகின்றது. இந்த ஐ.டி.ஐ. நிறுவனத்தில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இது குறித்து பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 



இந்த நிலையில், ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் உள்பட பல்வேறு சலுகைகளும் மறுக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து, அதிகாரிகளிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...