நீலகிரி : மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் அவ்வப்போது குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை நிலை வருகிறது. மேலும், இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பலாப்பழம் விளையத் துவங்கியுள்ளதால், சமவெளிப் பகுதியில் இருந்து குட்டியுடன் கூடிய யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப் போது, சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.

குட்டிகள் சாலையின் குறுக்கே நின்று விடுவதால் தாய் யானை ஆக்ரோஷமடைகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் மற்றும் சாலை ஓரத்தில் கடைகளை நடத்தி வருபவர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, இப்பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.