கட்டண உயர்வைக் கண்டித்து கோவை ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமர்ந்து மாணவிகள் தர்ணா

கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதியில் அறிவிக்கப்படாத திடீர் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவிகள் விடுதி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதியில் அறிவிக்கப்படாத திடீர் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவிகள் விடுதி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோவை - அவிநாசி சாலையில் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். மேலும், இந்த விடுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர். இந்த நிலையில், விடுதி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விடுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறி நேற்று மாலை முதல் விடுதியில் உள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒரே ஆண்டில் இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், ஆனால், கட்டண உயர்வுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் ஏதும் இந்த விடுதியில் இல்லை என இந்த விடுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, விடுதியில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்த பந்தய சாலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விடுதி நிர்வாகத்தினரையும் வரவழைத்த காவல்துறையினர் இருதரப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக உடன்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாக தரப்பினர் நிரந்தர தீர்வு காணப்படும் என காவல்துறையினர் முன்னிலையில் மாணவிகளிடம் உறுதியளித்தனர். இரவு நேரத்தில் மாணவிகள் விடுதி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...