கோவையில் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

கோவை : இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விவசாய நிலத்தில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவை : இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விவசாய நிலத்தில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. 



கோவை அடுத்த இருகூர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழன்று, பீளமேடு - சூலூர் செல்லும் சாலையில் உள்ள நந்தகுமார் (34) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்தது. 



இதில், பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி சுமார் 3 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது. மேலும், அதனுடைய பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள், வெடித்த விமானத்தின் பாகங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இதனிடையே, தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பெட்ரோல் டேங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், பாதுகாப்பைக் கருதி அதனைக் கழற்றி கீழே விட்டுள்ளதாக விமான பயிற்சித் துறை விளக்கம் அளித்துள்ளது. 

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...