கோவை : கோவை மதுக்கரை அருகே அருகே உள்ள கல்குழியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மதுக்கரை அருகே அருகே உள்ள கல்குழியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கரை அருகே உள்ள கல்குழியில் இன்று மூன்று சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில், குளித்துக் கொண்டிருந்த மூன்று பேரும் திடீரென நீரில் மூழ்கி பலியாகினர். பின்னர், தகவலறிந்த அப்பகுதி மக்கள் மீட்புப்பணியினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வந்த மீட்பு பணி துறையினர், நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களின் உடலை மீட்டுள்ளனர். மேலும், மற்றொரு சிறுவனின் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ராஜேந்திரன் என்பவரின் மகன் சிவா (8), ரமேஷ் என்பவரின் மகன் கார்த்திக் (8), மற்றொரு ரமேஷ் என்பவரின் மகன் தினேஷ் (8) என தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.