கோவையில் கருத்தரித்தல் மையத்தில் ஐந்தரை மாத சிசு இறந்த சம்பவம் : உறவினர்கள் நிர்வாகத்துடன் வாக்குவாதம்

கோவை : ஆவாரம்பாளையம் அருகே உள்ள தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்தரை மாத சிசு உயிரிழந்த சம்பவத்தையடுத்து, உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஆவாரம்பாளையம் அருகே உள்ள தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்தரை மாத சிசு உயிரிழந்த சம்பவத்தையடுத்து, உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மனைவி பேச்சித்தாய். இந்த தம்பதியனர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள ஐஸ்வர்யா செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இங்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சிகிச்சை பெற்றனர். 15 நாட்களுக்கு ஒருமுறை எடுக்கும் ஸ்கேனில் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், நேற்று பிற்பகல் பேச்சித்தாய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக இருப்பதாகவும், அதற்கு ஒரு ஊசி செலுத்த வேண்டுமென்றும் கூறி அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு குழந்தை நன்றாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் குழந்தை இறந்து விட்டதாகவும், பெண்ணின் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும் கூறியுள்ளனர். 

தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெண்ணின் உறவினர்கள் தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், இதுவரை சுமார் 14 லட்சம் ரூபாய் மருத்துவச் செலவுக்காக வசூலித்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர் மருத்துவமனை நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது :- செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமாகும் பெண்களில் 20 சதவீதம் பேருக்கு இதுபோன்று கருக்கலைய வாய்ப்புள்ளது. இப்பெண்ணிற்கு இரட்டை குழந்தையாக கரு வளர்ந்து வந்த நிலையில், 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த குழந்தையின் இறப்பிற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல. நாங்கள் உரிய சிகிச்சைகள் கொடுத்துள்ளோம். நல்ல தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை கொடுத்துள்ளோம். சில குறைபாடுகளால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது, என தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...