கோவை : ரோட்டரி கிளப் ஆப் கோவை டெக்சிட்டி மற்றும் ஐ பவுண்டேசன் இணைந்து மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று தொடங்கியது.

மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் இன்று முதல் 2 நாட்கள் நடக்கும் இந்த கண் பரிசோதனை முகாமை ஐ பவுண்டேசனின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஆர்யன், பொது மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் கமல் குமார், செயலாளர் வைரவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த 2 நாட்கள் முகாமில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இலவசமாக கண்பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

"மாணவர்களுக்கு இதுபோன்ற முகாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் சில மருத்துவக் காரணங்களால் படித்தல் மற்றும் எழுதுதலில் பின்னடைவு ஏற்படுகிறது. இந்த முகாமிற்குப் பிறகு மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. மாணவர்களுக்காக ரோட்டரி டெக்சிட்டி இலவசமாக இந்த முகாமை நடத்துகின்றனர். கண்பார்வை குறைபாட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு இந்த முகாம் தொடர்ந்து நடத்த இருக்கிறார்கள்," என்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வகுமாரி.