பொள்ளாச்சி பாலியல் வழக்கு : முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை : பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள், முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட சதீஷ், சபரி ராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் பல்வேறு கோரிக்கைகளையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில், சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியிலேயே தங்கியிருந்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் முதற்கட்டமாக, பாலியில் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குற்றம் என தெரிந்தும் குற்றம் செய்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்த அவரது தந்தை கனகராஜ் மற்றும் தாயார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது. மேலும், வீட்டில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா..? என்ற சந்தேகத்தில் மீண்டும் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடந்த ஆய்வுக்குப்பின், சி.பி.ஐ. அதிகாரிகள் கிளம்பி சென்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மீண்டும் திருநாவுக்கரசு வீட்டில் ஆய்வு செய்தது பாலியல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பதை காட்டியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...