வால்பாறையில் காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி பலி

கோவை : வால்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 54 வயதுடைய எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : வால்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 54 வயதுடைய எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறையில் உள்ள குரங்குமுடி பகுதியில் அமைந்துள்ள சிவா காஃபி எஸ்டேட்டில் செல்வராஜ் (54) இரவு காவலராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் இருந்து பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், திங்கட்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செல்வராஜை தேடிச் சென்றனர். அப்போது, குரங்குமுடி சாலையில் உயிரிழந்த நிலையில் செல்வராஜ் சடலமாகக் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் காட்டு யானை தாக்கி செல்வராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...