கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி முதல் இனி வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும் 03-ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை அனைத்து வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்ன ராமசாமி முன்னிலை வகிப்பார்கள். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற கோரிக்கை மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் கோரிக்கைகளையும் இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் நேரில் அளிக்கலாம். இக்கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மாநகர பொறியாளர் மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையாளாரகள், சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.