திருப்பூர் : திருப்பூரில் பட்டா வழங்கிய இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்ட விடாமல் இடையூறு செய்வதாக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி புகுந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சிக்குட்பட்ட நிழலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய பட்டாவிற்கான இடத்தை அளந்து வழங்காததால், தற்போது அவ்விடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருப்பதோடு, அங்கு குடிசை அமைக்க விடாமல் அவர்கள் தடுத்து வருவதாக நிழலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தங்கள் பட்டாவிற்கான நிலத்தை மாவட்ட நிர்வாகம் அளந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். இதனையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.