கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், இன்று காலை அப்பகுதியில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியைக் கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, வடவள்ளி பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, போராட்டம் நடைபெற்ற வடவள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஒருபுறம் தி.மு.க.வினர் மாநகராட்சி மற்றும் அ.தி.மு.க.வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில், மறுபுறம் ஒலிபெருக்கியில் மழைக்காக யாகமந்திரங்கள் ஓதப்பட்டு வந்தது. இதனால், வடவள்ளி பேருந்து நிறுத்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. இருப்பினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரைக் கைது செய்தனர்.