கோவை : சாலையோரக் கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு காய், கனி விற்பனையில் சிறு வியாபாரிகள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : சாலையோரக் கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு காய், கனி விற்பனையில் சிறு வியாபாரிகள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை பெரிய கடை வீதி தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் சாலையோரப் பகுதியில் காய், கனி விற்பனை செய்து வரும் சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எடை மேடைகள் வைத்து விற்பனை செய்வது போல அமர முற்பட்டவர்களை அங்கிருந்த காவலர்கள் தடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து காய், கனி சிறு வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் ஜலேந்திரன் கூறுகையில், "கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இங்குள்ள சிறு வியாபாரிகள் காய்,கனி வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் 88 சாலையோரக் கடைகள் உள்ள நிலையில், தற்போது அங்கு மற்றொரு பிரிவினர் கடைகள் அமைத்து ரூ. 300 முதல் ரூ. 700 வரை வசூல் செய்கின்றனர். அவர்கள் நிர்ணயித்த தொகையை சிறு வியாபாரிகளால் செலுத்த முடியாது என்பதால், மாநகராட்சி சார்பில் தங்களுக்கு என தனி இடம் ஒதுக்கி தர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.