கோவை : ஆனைகட்டி அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என பணம் கொடுத்து அழைத்து வரபட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 24ம் தேதி ஆனைகட்டி சாலை ஜம்புகண்டி பிரிவில் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவரின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்தை தொடர்ந்து மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட வடக்கு வட்டாட்சியர் மதுபானக் கடையை தற்காலிகமாக மூடப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தால் நிரந்தரமாக மூடப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என மருத்துவர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் மனு அளித்த நிலையில், ஆனைகட்டி ஜம்புகண்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை பணம் கொடுத்து அழைத்து வந்த ஒரு பிரிவினர் அங்கு மதுபான கடை வேண்டும் என மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல தெரியாமல் விழித்தனர்.
பின்னர், அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், "தடாகம் பகுதியில் இருந்து மது வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பவர்கள் தான் கடை வேண்டாம் என கூறுகின்றனர். மேலும், அங்கு கடை மூடப்பட்டால் சாராய புழக்கம் ஏற்படும். கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரிக்கும். இங்கு வேலை செய்பவர்கள் தினக்கூலிகள். எனவே, மது அருந்துவதால் அவர்களுக்கு உடல் அசதி குறையும்," என்றார்.

இதனிடையே, அங்கு வந்திருந்த பொதுமக்கள் கடை வேண்டும் வேண்டாம் என மாறி மாறி பேட்டி அளித்ததால், மலைவாழ் மக்களை அழைத்து வந்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை கடிந்து கொண்டனர்.