திருப்பூரில் போக்குவரத்து காவலருடன் மல்லுக்கட்டிய குடிபோதை ஆசாமி : வைரலாகும் வீடியோ

திருப்பூர் : திருப்பூர் அருகே குடிபோதையில் இருந்த வாலிபர், போக்குவரத்து போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் : திருப்பூர் அருகே குடிபோதையில் இருந்த வாலிபர், போக்குவரத்து போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூர் - அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது, முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பொண்ணண்னன் என்பவருக்கும், முரளிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், காவலரின் சட்டையும் கிழிந்தது. இதனிடையே, காவலர் பொண்ணனன், குடிபோதையில் இருந்தவரை தரதரவென ரோட்டில் இழுத்து வந்த காட்சிகள், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

தொடர்ந்து, காயமடைந்த காவலர் பொண்ணண்னன் மற்றும் முரளி ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...