குன்னூரில் ரூ. 11.89 கோடிக்கு ஏலம் போன தேயிலைத்தூள் : விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிருப்தி

நீலகிரி : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ. 11 கோடியே 89 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.

நீலகிரி : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ. 11 கோடியே 89 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் தேயிலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கின்றனர். இந்த ஏலத்தில் மொத்தம் 19 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில், 12 லட்சத்து 20 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 84 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. இந்த ஏலத்தில் 73 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இதன் அளவு 13 லட்சத்து 62 ஆயிரம் கிலோ ஆகும். இதன் ரொக்க மதிப்பு 11 கோடியே 89 லட்சம் ரூபாய் ஆகும்.

ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் ரூ. 5 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உயர்ந்தபட்ச விலையாக சி.டி.சி. ரக தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ. 261 என்ற விலையிலும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ. 235 என்ற விலையிலும் ஏலம் போனது.



சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு 73 ரூபாயிலிருந்து 78 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 107 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று 72 ரூபாயிலிருந்து 77 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 108 ரூபாயிலிருந்து 118 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.



விற்பனை எண் 27-க்கான ஏலம் எதிர்வரும் 4,5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 21 லட்சத்து 95 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு உள்ளதாக தேயிலை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...