கோவையில் இருந்து விதியை மீறி பயணிக்கும் அரசு பேருந்து : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்க்கும் பயணிகள்

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பேருந்தானது விதியை மீறி பாதுகாப்பற்ற பயணம் செய்வதாக சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பேருந்தானது விதியை மீறி பாதுகாப்பற்ற பயணம் செய்வதாக சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட கோவை கோட்டம் சார்பில் 1,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், டவுன் பேருந்துகள் நகர் பகுதியிலும், மப்சல் பேருந்துகள் திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்பகின்றன. அவற்றில் சில பேருந்துகள் ஜன்னல்கள் உடைந்தும், படிகள் உடைந்தும் இயக்கப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல, பேருந்துகளின் முன் பகுதியில் இரண்டு சக்கரமும் பின் பகுதியில் நான்கு சக்கரமும் என மொத்தம் ஆறு சக்கரம் இருக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதி மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பாகவும் உள்ளது.

ஆனால், கோவை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் TN 38 N 1419 என்ற எண் கொண்ட பேருந்து முன்னே இரண்டு சக்கரம் பின்னே இரண்டு சக்கரம் என மொத்தம் நான்கு சக்கரம் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. இது பாதுகாப்பற்ற பயணம் என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நான்கு சக்கரம் கொண்டு இயக்கப்படும் பேருந்தின் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவானது பல்லடம் ரோடு செங்குட்டையாம் பாளையம் அருகே எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 



மேலும், இந்த விதிமீறலான பயணம் குறித்து சிம்பிளிசிட்டி செய்தி குழுவினர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது "அவர் உடனடியாக கோவை கோட்ட அதிகாரிகளிடம் விசாரணைக்கு உத்தரவிட்டார்." இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் செயலாளர் சுகாதாரத்துறையில் மக்களின் தேவையை புரிந்து செயல்பட்டது போல, தற்போது போக்குவரத்து கழகத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரி செய்வார் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...