திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் வீதி குடியிருப்பில் வசித்து வருபவர் பர்வீன் பானு. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் குடியிருக்கும் வீட்டின் கதவு காலை அதிக நேரம் திறக்காமல் இருப்பதை கண்டு, வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, பர்வீன் பானு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதியதாக குடிவந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.