கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஜோடி கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்யக் கூடாது என நினைத்து கடந்த 25-ம் தேதி கனகராஜை சொந்த சகோதரரே ஆணவப் படுகொலை செய்தார். இதனை தடுக்க வந்த காதலி வர்ஷினி பிரியாவையும் கனகராஜின் சகோதாரர் வினோத் சராமரியாக வெட்டினார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்த வினோத் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த வர்ஷினியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஆணவப் படுகொலை சம்பவத்தில் மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பதாக வர்ஷினி பிரியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜயப்பன், கந்தவேல், சின்னராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைப்படுத்த உள்ளன.