கோவை : மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், மினிவேனும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள புங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள (நஞ்சைய லிங்காம்மாள் கல்லூரியில்) இரண்டாம் ஆண்டு தொழில்கல்வி பயின்று வந்தார். நேற்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடித்து இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சத்தி சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, மேட்டுப்பாளையம் சந்தைகடை அருகே வந்த போது, எதிரே வந்த மினிவேன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தூக்கி விசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவர் சந்தோஷ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.