6 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி கோவையில் இன்று தொடக்கம்

கோவை : கோவையில் 6 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவை : கோவையில் 6 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.



தமிழ்நாடு கைவினை ஆணையம் சார்பில் சுகுணா கல்யாண மண்டபத்தில் ‘கிராஃப்ட் பசார் 2019’ என்ற தலைப்பில் கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது. வரும் ஜூலை 4-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி, செயலாளர் சுஜினி பாலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.



“நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஏதேனும் ஒன்றை மையப்படுத்தி இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆந்திராவை மையப்படுத்தி கண்காட்சி நடத்தப்படுகிறது. மங்கலகிரி, கலம்கரி, ஃபுல்கரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார் கைவினைப் பொருட்கள் ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி.



சுமார் 117 கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...