கோவை : கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர், உறவினர் ஒருவரின் குழந்தையை பார்க்க இன்று ஆம்னி வேன் மூலம் பாலக்காடு சந்திரா நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இந்த ஆம்னி வேனை கரும்புகடையைச் சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் ஓட்டிச் சென்றார். வாளையாரைத் தாண்டி செல்லும்பொழுது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஷாஜஹான் மற்றும் வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், குழந்தைகளான ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, மேலும் வாகனத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தகவலறிந்து சென்ற வாளையாறு போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.