திருப்பூர் : அவிநாசி அருகே மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த குடி பழக்கம் கொண்ட கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (34). இவரது மனைவி துளசிமணி (21). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். மனோகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த காரணத்தால், அடிக்கடி வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், தனது மனைவியிடம், அவரது பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வருமாறும் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2012 ஜூலை 18-ம் தேதி வீட்டில் துளசிமணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, துளசிமணியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இருப்பினும், அன்றிரவே அவர் உயிரிழந்தார். மனைவியின் தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்த அவிநாசி போலீஸார் மனோகரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனோகரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.