கோவை : தபால்துறையின் செயல்பாடு குறித்தும், பள்ளி மாணவர்களின் எழுத்து திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் மேட்டுப்பாளையத்தில் மாதிரி தபால் நிலையம் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் தனியார் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தபால்துறையின் செயல்பாடுகள் குறித்தும் கடித பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், மாதிரி தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. உலகத்தில் முதல் தகவல் பரிமாற்றம் காகித வழியே நடைபெற காரணமாக இருந்து தபால் துறையின் சிறப்புகள் குறித்தும், காலபோக்கில் அழிந்து வரும் அதன் தற்போதைய நிலையை அறிந்து மீட்டெடுக்கவும் மாணவர்கள் இடையே கடிதம் எழுதும் எழுத்து திறனை ஊக்குவிக்க இந்த மாதிரி தபால்துறை அலுவலகம் திறக்கபட்டுள்ளது.

இதனை இன்று தமிழக மேற்குமண்டல தபால்துறை தலைவர் சியூலிபர்மன் திறந்து வைத்தார். இதில், இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தபால் தலைகள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை பார்வையிட்ட தமிழக மேற்குமண்டல தபால்துறை தலைவர் சியூலிபர்மன் மாணவர்களுடன் தபால்துறை குறித்து கலந்துரையாடினார். மேலும், தபால்துறையில் தற்போது செயல்படுத்தப்படும் குழந்தைளுக்கான சேமிப்பு கணக்குகள் குறித்தும் இன்சூரன்ஸ், வெளியூர்களுக்கு பணம் அனுப்பும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு துவங்கபட்டதுடன், மாணவர்களிடையே எழுத்து பழக்கத்தை ஊக்குவிக்க வாரம்தோறும் பெற்றோருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமான கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டனர்.