நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இங்குள்ள உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பிற்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை பி.எம்.சி. செக்சனில் பயோ மாடல் சார்ஜ் மருந்தினை நிரப்பிக் கொண்டிருந்த போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சூரஜ் குமார் 80 சதவீத தீக்காயத்துடனும், ராபின் சற்குணமுரளி ஆகியோர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாகராஜ் என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோகன் மற்றும் தினேஷ் ஆகியார் மூச்சுத் திணறல் காரணமாக அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.