அவிநாசி சாலையில் இருவேறு விபத்துக்களில் புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கோவை : அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கோவை : அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



புதுச்சேரியில் உள்ள ரங்காரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் ராகவன் (21), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (20) ஆகிய இருவரும் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஸ் இரண்டாமாண்டு இளங்கலை அறிவியல் படித்து வருகிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்த உடன் படிக்கும் 12 மாணவர்கள் ஆறு பைக்குகளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். 



இந்நிலையில், இன்று காலை அவிநாசி பைபாஸ் சாலை திருப்பூர் பிரிவு பாலத்தில் வரும் போது, ராகவன் மற்றும் வேல்முருகன் இருவரும் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதேபோல, அவிநாசி அருகே உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (27) என்பவர் திருப்பூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவிநாசி பைபாஸ் சாலையில் தேவம்பாளையம் பிரிவில் முன்னே சென்ற பனியன் கம்பனி ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, விபத்துக்குள்ளாகி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...