கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 27-ம் தேதி மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வர்ஷினி பிரியாவும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். இதில், காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்ய வேண்டும். மேற்கு மண்டலத்தில் உடுமலை சங்கர், கோகுல்ராஜ் படுகொலை உள்ளிட்ட இது போன்ற பல ஆணவப்படுகொலை சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போன்று சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தனி சட்டபிரிவு துவங்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பினை மாநில அரசு மற்றும் காவல்துறை பின்பற்றவில்லை. ஆகவே, உடனடியாக பின்பற்ற வேண்டும், இவ்வாறு கூறினார்.