சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கியதில் 3 பேர் பலியான சம்பவம் : பண்ணை உரிமையாளர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, பண்ணைக்கு சீல்

கோவை : சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை : சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை கணபதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வெண்பன்றி வளர்ப்பு பண்ணை கீரணத்தம் அருகே உள்ள லட்சுமி கார்டனில் உள்ளது. இந்த பண்ணையில் உள்ள பன்றிகளின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவில்மேட்டை சேர்ந்த 6 பேர் வந்துள்ளனர். நேற்று (ஜுன் 27) காலை சுமார் 11 மணி அளவில் ராசப்பன் (32), வேடியப்பன் (30) மற்றும் மற்றொரு வேடியப்பன் (29) என மூன்று பேரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக முதலில் ராசப்பன் விஷவாயு தாக்கி உள்ளே விழுந்தார். இதையடுத்து, அருகே இருந்த மற்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கினர். இதில், விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவு நீர்த்தொட்டிக்குள் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். 

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் பன்றி பண்ணையின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை கோவில்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 284, 304 மனிதக்கழிவுகளை இயந்திரங்களை வைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மீறி தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்தி கழிவு அள்ளும் பணியில் ஈடுபடுத்தியது உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...