தனியார் பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு ராணுவ வீரரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை : திருப்பூர் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூர் அருகே ராணுவ வீரர் ஒருவரின் மனைவி, தனது குழந்தைகள் பயிலும் பள்ளியின் உடற்கல்வ ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூர் அருகே ராணுவ வீரர் ஒருவரின் மனைவி, தனது குழந்தைகள் பயிலும் பள்ளியின் உடற்கல்வ ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



திருப்பூர் பாண்டியன் நகர், குமரன் காலனி 5-வது வீதியைச் சேர்ந்த நர்மதா தேவி (33). இவரது கணவர் பிரகாஷ் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். நர்மதா தேவி தனது 13 மற்றும் 15 வயதுடைய இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ வீரரான பிரகாஷ் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், இன்று நர்மதா தேவியின் குழந்தைகள் படித்து வரும் தனியார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் தினேஷ் குமாரின் செல்போனிற்கு வாட்சாப் மூலமாக நர்மதா தேவி, சேலை தூக்கில் தொங்குவது போல் படத்துடன் தனது குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என தகவல் அனுப்பி இருந்தார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமார் நர்மதா தேவியின் வீட்டிற்கு வந்து பார்த்த போது தூக்கில் தொங்கியபடி உடல் இருந்ததைக் கண்டார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நர்மதா தேவியின் உடலை மீட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நர்மதா தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார், நர்மதா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தனது தற்கொலை குறித்து கணவருக்கோ, உறவினர்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல் உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் நர்மதா தேவி தெரியப்படுத்தியது ஏன்..? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உட்பட அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...