அரசுத் துறை அலுவலகங்களுக்கு அடிப்படை பணியாளர்களை அளிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களுக்கு தேவையான அடிப்படை பணியாளர்களை அளிக்கும் ஒப்பந்ததாரர்கள் ஜூலை 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களுக்கு தேவையான அடிப்படை பணியாளர்களை அளிக்கும் ஒப்பந்ததாரர்கள் ஜூலை 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசுத்‌ துறை அலுவலகங்களுக்கும்‌ தமிழ்நாடு அடிப்படைப் பணியில்‌ பெருக்குபவர்‌, துப்புரவுப்‌ பணியாளர்‌, மற்றும்‌ இரவுக்‌ காவலர்‌ உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ ஆட்களை அளித்திட மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகாரம்‌ பெற்ற தகுதி வாய்ந்த ஏஜென்சியினர்‌ முத்திரையிடப்பட்ட உறையில்‌ உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல்‌, விலைப்‌ புள்ளி விபரங்களுடன்‌ “அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரர் நியமனத்திற்கான ஒப்பந்தப்புள்ளி'” என்று உறையின்‌ வெளிப்புறம்‌ தெளிவாகக்‌ குறிப்பிட்டு ஜூலை 11-ம் தேதியன்று பிற்பகல்‌ 05.45 மணிக்குள்‌ மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்‌.

மேலும்,‌ மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி விபரத்தினை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர் ‌(பொது) அவர்களது அறையில்‌ வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில்‌ ஜூலை 11-ம் தேதி மாலைக்குள் சேர்க்கப்பட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...