கோவை : கோவையில் முன்னணி வணிக வளாக மால்களில் ஒன்றான புரூக் பீல்டு மாலில் மின்சார உற்பத்திக்காக 345 கி.வா.பி சூரிய ஒளி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்வாரியம் தரும் மின்சாரம் தடைப்படும் போதெல்லாம் மாலில் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுவதால், ஜெனரேட்டர் பயன்பாடு குறைந்துள்ளது. டீசல் செலவும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. சன்ஹாட் நிறுவனம், ஜெனரேட்டருடன் இணைந்து செயல்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் சூரிய ஒளி மின் உற்பத்தி பேனல்களை அமைத்துள்ளது. தற்போது, புரூக்பீல்டு மாலின் மேல் மாடியில் 595 கி.வா.ப. மின்திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 700 டன் கார்பன் வாயு வெளியாவதை தடுப்பதுடன், 8.5 லட்சம் யூனிட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். தற்போது ஒவ்வொரு நாளும் மாலில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 10% மின்சாரம் சூரிய ஒளி மின்சாரமாக உள்ளது.

இந்த சூரிய ஒளி மின் கலனை சன்ஹாட் நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பத்தில் கண்காணிக்கிறது. மின் உற்பத்தியை நேரடியாக அவ்வப்போது பதிவு செய்கிறது. தானியங்கி முறையில் மின் உற்பத்தி சரியான முறையில் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
புரூக் பீல்டு மால் இயக்குனர் அஸ்வின் பாலசுப்ரமணியம் கூறுகையில், "புரூக்பீல்டு மாலில் மரபுசாரா இயற்கை எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளோம். சூரிய ஒளி மின்சாரம் எங்களது தேவைக்கு பெரிதும் உதவி வருகிறது. மிகவும் திறம்பட சூரிய ஒளி பேனல்களை நிறுவி, தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளும் சன்ஹாட் நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சரியான சமயத்தில், துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூடுதல் பயனடையச் செய்துள்ளது. தற்போது இரண்டாவது கட்ட திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்," என்றார்.

சன்ஹாட் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் தேசாய் கூறுகையில், "புரூக்பீல்டு மால் மேற்கூரையில் சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கலனை நிறுவியதில் பெருமைப்படுகிறோம். இது, வணிக ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ஒரு நல்ல வாய்ப்பாக மாறி வருகிறது. தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்தி பலனடையலாம்," என்றார்.