உரக்கிடங்கு அமைக்காதே...! : திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்கும் பணிக்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்கும் பணிக்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. 



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மூன்று முறை மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து உரக்கிடங்கு அமைக்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அதிகாரிகள், இன்று சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அதிகாரிகள் திருப்பி சென்றனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நாளை மனு அளிக்க உள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...