இயற்கை பேரிடர்‌ ஆபத்து விழிப்பறிக்கைகளை அனுப்பும் விதமான செயலி அறிமுகம்

கோவை : இயற்கை பேரிடர்‌ ஆபத்து விழிப்பறிக்கைகளை பெறுவதற்காக தமிழ்நாடு பேரிடர்‌ மேலாண்மை முகமையால்‌ டி.என். ஸ்மார்ட் என்னும்‌ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை : இயற்கை பேரிடர்‌ ஆபத்து விழிப்பறிக்கைகளை பெறுவதற்காக தமிழ்நாடு பேரிடர்‌ மேலாண்மை முகமையால்‌ டி.என். ஸ்மார்ட் என்னும்‌ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேரிடர்‌ காலங்களில்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்களுக்குப் பயன்படும்‌ வகையில்‌ டி.என். ஸ்மார்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை செல்போனில்‌ உள்ள கூகுள் பிளே ஸ்டோரில்‌ இருந்து இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இச்செயலியை‌ செல்போனில்‌ பதிவிறக்கம்‌ செய்த பின்‌, தங்களின்‌ செல்போன்‌ எண்ணை பதிவு செய்தால் ஒருமுறை கடவுச்சொல்‌ பெறப்படும்‌. ஒருமுறை கடவுச்சொல்லை பதிவு செய்து செயலிக்குள்‌ சென்று தங்களின்‌ சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்‌. 

டி.என். ஸ்மார்ட் செயலியின்‌ மூலம்‌ மழை, வெள்ளம்‌, அதிகவெப்பம்‌, புயல்‌ சுனாமி, நிலநடுக்கம்‌ போன்ற பேரிடர்‌ காலங்களில்‌ உடனுக்குடன்‌ தங்களுக்கு விழிப்பறிக்கை அனுப்பப்படும்‌. அது தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்‌. இச்செயலி மூலம்‌ தினந்தோறும்‌ மழை பொழிவு விவரங்களையும்‌, வானிலை முன்னறிவிப்புகளையும்‌ பெறலாம்‌. மேலும்,‌ பொதுமக்கள்‌ அவசர கால செய்திகளை இச்செயலி மூலம்‌ அனுப்பலாம்‌. இச்செய்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன்‌ மீது அறிக்கை பெறப்படும்‌. இச்செயலியை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, நாளிதழ்‌ நிருபர்கள்‌, கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள்‌, தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ பதிவிறக்கம்‌ செய்து பயன்‌ பெறலாம்,‌ என மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...