கோவை : இயற்கை பேரிடர் ஆபத்து விழிப்பறிக்கைகளை பெறுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையால் டி.என். ஸ்மார்ட் என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்குப் பயன்படும் வகையில் டி.என். ஸ்மார்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை செல்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பின், தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்தால் ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். ஒருமுறை கடவுச்சொல்லை பதிவு செய்து செயலிக்குள் சென்று தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
டி.என். ஸ்மார்ட் செயலியின் மூலம் மழை, வெள்ளம், அதிகவெப்பம், புயல் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தங்களுக்கு விழிப்பறிக்கை அனுப்பப்படும். அது தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இச்செயலி மூலம் தினந்தோறும் மழை பொழிவு விவரங்களையும், வானிலை முன்னறிவிப்புகளையும் பெறலாம். மேலும், பொதுமக்கள் அவசர கால செய்திகளை இச்செயலி மூலம் அனுப்பலாம். இச்செய்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீது அறிக்கை பெறப்படும். இச்செயலியை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நாளிதழ் நிருபர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம், என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.