கோவை அரசு மருத்துவமனையில் மர்ம மற்றும் பன்றி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலி

கோவை : காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினமும் கிட்டத்தட்ட 8,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதில், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள், குறிப்பாக பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இப்படி கடந்த ஆண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, பன்றிக்காய்ச்சல் மரணத்திற்கு காரணம் கடைசி நேரத்தில் முடியாத பட்சத்தில், கோவை அரசு மருத்துவமனைக்கு வருவதே என குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சாந்தி (54) என்ற பெண் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அவினாசி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி அவருக்கு இருப்பது தெரிய வந்ததையடுத்து, நேற்று இரவு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல, கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் குமாரின் மனைவி கீதா (37) மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியை சேர்ந்த மணிமாறன் (60) ஆகியோர் மர்ம காய்ச்சலினால் பலியாகியுள்ளனர். கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்த நேரத்தில் தற்போது மீண்டும் காய்ச்சலினால் ஏற்படும் உயிர் பலி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...