போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு : ஆம்புலன்சின் வழியை மறித்தால் ரூ. 10,000 அபராதம்

கோவை : ஆம்புலன்சின் வழியை மறிப்பு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம், தற்போதைய புதிய சட்டத்தின்படி பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோவை : ஆம்புலன்சின் வழியை மறிப்பு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம், தற்போதைய புதிய சட்டத்தின்படி பல மடங்கு அதிகரித்துள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டம் காலாவதியாகி விட்ட நிலையில், மத்திய அரசு தற்போது அதனை புதுப்பித்துள்ளது. அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சகம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை கடந்த திங்கட்கிழமை பரிந்துரை செய்தது. அதில், போக்குவரத்து விதிகளை மீறி நடப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை, நடப்பு நிலையில் இருந்து பத்து மடங்காக உயர்த்தும் பரிந்துரை இடம்பெற்றிருந்தது. கடந்த மக்களவை கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறாத காரணத்தினால், இது நிலுவையில் இருந்து வந்தது. தற்போது மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், மோட்டார் வாகன மசோதாவில் விதிமுறைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டுதல், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறில்களுக்கான அபராதத் தொகை உச்சபட்ச அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்றால் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படும். காப்பீடு காலம் காலவதியாகி இருந்தால் ரூ. 2,000 அபராதம் செலுத்த வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்படும், மேலும் 3 மாதங்களுக்கு சம்மந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். சிறுவர்கள் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்வதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போக்குவரத்து சிக்னலை மீறி செயல்படும் குற்றத்திற்காக தற்போது ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினரின் கட்டளைக்கு இணங்காமல் செல்பவர்களிடம் தற்போது ரூ. 500 வசூலிக்கப்படுகிறது. இதற்கான அபராதத் தொகை ரூ. 2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல அங்கீகரிக்கப்படாத வாகனங்களை ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். முன்னதாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுபவரிடம் ரூ. 1,000 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த குற்றத்திற்காக ரூ. 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்ரிகேட்டர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. 

மேலும், அதிகளவிலான லோடிங் செய்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இந்த குற்றத்திற்காக சம்மந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம், இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...