கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின்படி அகற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி வழிகாட்டுதலின்படி, டாக்டர் நஞ்சப்பா சாலை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 50க்கும் மேலான கடைகளும், மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 25க்கும் மேலான கடைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் முன்னிலையில் நடைபெற்றது. திட்டங்கள் செயற்பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன், திட்டங்கள் உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.