பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை : கோவையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் கோவையிலிருந்து கருத்துக்கள் பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதில், ஒரு நபர் முகநூல் மூலம் இந்து மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட முஸ்லிம் மக்களை தூண்டியும், முஸ்லிம் மக்கள் மீது இந்து மக்கள் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் என்பவர் கடந்த 26-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில், “இஸ்லாமியர்களை கொலை செய்ய அவர்கள் தேர்ந்து எடுத்து இருப்பது "ஜெய்_ஸ்ரீராம்" அப்படி ஒரு நிலமை நமக்கு வந்தால் அவர்கள் நூறு நபர்கள் இருந்தாலும், இரண்டு மூன்று பேரையாவது போராடி போட்டு தள்ளிவிட்டு கலிமா சொல்லி மரணத்தை தழுவும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்க வேண்டும் நாமும் அதற்க்கு தயாராக வேண்டும். அதுதான் நமது நிய்யத்தாக இருக்க வேண்டும்,” என பதிவிட்டிருந்தார்.



அதேபோல, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சிறையில் இருக்கும் அல்லுமா இயக்கத்தை சேர்ந்த பாஷாவிற்க்கு ஆதரவாகவும் தொடர்ந்து பதிவுகள் செய்துள்ளார். எனவே, குனியமுத்தூர் போலீசார் முகமது யூசுப் மீது 153 A,505(2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தவர் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முகமது யூசுப் வீட்டில் உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், முகமது யூசுப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...