கோவை : வால்பாறை அருகே எஸ்டேட்டிற்குள் புகுந்து காட்டெருமையை புலி வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த வில்லோனி எஸ்டேட்டில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதை எந்த காட்டு விலங்கு கொன்று இருக்கும் என கண்டறிய வனத்துறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதில், புலி ஒன்று அப்பகுதியில் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதன்மூலம், காட்டெருமையை அடித்துக் கொன்று இருப்பது புலி தான் என உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.