கோத்தகிரியில் குத்தகை தொகை வழங்காத செல்போன் கோபுரத்திற்கு சீல் : பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம்

நீலகிரி : கோத்தகிரி அருகே குத்தகை தொகை வழங்காத பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்ததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்திமலையில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைத்து உள்ளனர். 1993-ம் ஆண்டில் இருந்து குத்தகை தொகை ஒரு கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 778 கோடி தராததால் கோத்தகிரி வட்டாட்சியர் சங்கீத ராணி சீல் வைத்தார்.இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 



மேலும், இந்த கோபுரத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு இணைப்பு உள்ளதால், அவையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு உள்ளே நுழைய முடியாது என்பதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...