பலதடைகளுக்குப் பிறகு மாதிரி சாலைகளாக்கும் பணிக்கு க்ரீன் சிக்னல்

கோவை மாநகரின் முக்கிய சாலைகள் மாதிரி சாலைகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டி.பி. சாலையில்

கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.வி.சுவாமி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட சாலைகளை மாதிரி சாலைகளாக மாற்றுவதற்கான பணிக்கு விரைவில் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகரின் முக்கிய சாலைகள் மாதிரி சாலைகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டி.பி. சாலையில்

முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.வி.சுவாமி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட சாலைகளை மாதிரி சாலைகளாக மாற்றுவதற்கான பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளில் மின்வயர்கள் பதிப்பதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இத்திட்டப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் நிலவி வந்தது.

இந்த நிலையில், டி.வி.சுவாமி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட சாலைகளில் மின்வயர்கள் பதிக்கும் விவகாரத்தில் மின்சார வாரியத்துறை ஒரு உடன்பாட்டை எடுத்துள்ளது. எனவே, இந்த வார இறுதிக்குள் இத்திட்டப்பணிக்கான தேவைகள் மற்றும் மின் வயர் பதிப்பதற்கான செலவு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இந்த இரு சாலைகளில் மேற்கொள்ளவிருக்கும் மாதிரி சாலை திட்டத்திற்கான தொழில்நுட்ப ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே ரேஸ் கோர்ஸ் சாலை ரூ. 83 கோடி மதிப்பிலும், டி.வி. சுவாமி சாலை ரூ. 44 கோடி மதிப்பிலும் மாதிரி சாலையாக உருவாக்க நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ரேஸ்கோர்ஸ் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 60 சதவீதமும், டி.வி. சுவாமி சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 50 சதவீதமும் குறைக்கப்பட்டு விட்டதாகவும், திட்ட வடிவமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...