வெள்ளலூரில் உள்ள அதிவிரைவு படையின் ஆண்டு விழா கொண்டாட்டம்

இந்தியாவில் மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து 250 பட்டாலியன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  இதே போல அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரிசர்வ் போலிஸ் படை இயக்குனர் துர்க பிரசாத் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




கோவை வெள்ளளூரில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் ஓர் அங்கமான கலவர தடுப்பு அதிவிரைவு படை வளாகம் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் 24 வது ஆண்டு விழா அந்த மையத்தின் வளாகத்தில் இன்று  நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டு கலவர தடுப்பு அதிவிரைவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், வஜ்ரா வாகனம் அணிவகுப்பு மற்றும் கலவர தடுப்பு நிகழ்ச்சிகளின் ஓத்திகை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விகையிலான சாகன நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இந்த கண்கவர் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசபடுத்தும் விதத்தில் அமைந்து இருந்தது.இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 



இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் போலிஸ் படை இயக்குனர் துர்க பிரசாத், மத்திய ரிசர்வ் படை பிரிவினர் எல்லை பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளுக்கு  பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும்,  ஜம்மு காஷ்மீரில் நிலவும் எல்லை பாதுகாப்பிலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், மத்திய ரிசர்வ் படைக்கு என தனியாக உளவு பிரிவு ஏற்படுத்தப்படு அந்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையை 10லிருந்து 15 ஆக அதிகரிக்கப்படும் என்றும்,  மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து, 250 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் துர்க பிரசாத் தெரிவித்தார்.




மேலும் மகளிர் பட்டாலியனகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மத்திய ரிசர்வ் படையில் கடந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை சுமார் 40 வீரர்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து குருடம்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....